பெற்றோர்கள் எச்சரிக்கை: ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் உறுதி !
அமெரிக்க நிறுவனமான ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ உலகம் முழுவதும் குழந்தைகளை பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் பல வருடங்களாக பேபி சோப், பேபி பவுடண், ஷாம்புகள், பாடி லோஷன்கள், மசாஜ் ஆயில் மற்றும் பேபி துடைப்பான்கள் என பல பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரில் நோய்கள் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அமெரிக்க அரசு பரிசோதனைக்கு அனுப்பியது. இந்த பரிசோதனையின் முடிவில் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் ஆஸ்பெஸ்ட்ராஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சுமார் 33 ஆயிரம் பேபி பவுடர் டப்பாக்களை திரும்ப பெற்றுள்ளது.