ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியாக இருந்த ஜான் மெக்காஃபே நேற்று சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியாக இருந்த 75 வயதான ஜான் மெக்காஃபே,தனது பெயரிலான மெக்காஃபே நிறுவனம் என்ற திட்டத்தை 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து,கடந்த 2014- 18 ஆம் ஆண்டுகளின்போது மெக்காஃபே 12 மில்லியன் டாலர்களை வருமானம் ஈட்டியதாகவும், ஆனால், வரியை முறையாக செலுத்தவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. மேலும், நியூயார்க்கில் நடந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதன்காரணமாக,கடந்த 2020 அக்டோபர் மாதம் ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் மெக்காஃபே கைது செய்யப்பட்டு, பார்சிலோனா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து,மெக்காஃபேயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்க ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது என்று நேற்று வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது.இதனால்,குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மெக்காஃபே தனது வாழ்நாள் முழுவதையும் அமெரிக்க சிறையில் கழிக்க வேண்டும்.
இந்நிலையில்,நேற்று இரவு மெக்காஃபே சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதனை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…