ஆர்ச்சரின் 6 ஆண்டுக்கு முன் ‘ஜோ’ என்ற ட்வீட் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்ட ஒரு ட்வீட் செம்ம ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லை, இவர் செய்திருந்த பல ட்வீட்கள் ட்ரெண்டாகி உள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் 21 நாள் ஊரடங்கு உத்தரவை “கணிப்பது” முதல் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரை முன்னறிவிப்பது வரை, ஆர்ச்சருக்கு அந்தத் துறையில் ஒரு சாமர்த்தியம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், தற்போது, ஜனநாயகக் கட்சி பைடன் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக வெளிவந்த உடனேயே, ஆர்ச்சரின் அக்டோபர் 4, 2014 ஆம் ஆண்டின்”Joe” என்ற ட்வீட் இணையதளத்தில் செம்ம வைரலாகி வருகின்றது.
இதனை, ஆர்ச்சர் 2014 ஆம் ஆண்டிலே ஜோ பைடன் அதிபராவார் என்று கணித்தாரா…? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…