கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோ பைடன்!
ஜோ பைடன் அவர்களுக்கு, டெலாவேர் மாகாணம், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பைசர் மருந்து அந்நாட்டு மக்களை ஆறுதல்படுத்தி உள்ளது. இதனையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்களுக்கு, டெலாவேர் மாகாணம், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மருந்து கிடைக்கும் பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என அமெரிக்க மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.