“ஜோ பைடனுக்கு ஒரு நாய் போல மூச்சுத் திணறல் ஏற்பட்டது” – அதிபர் டிரம்ப்!
அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்துள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப், இன்று பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ஜோ பைடன் வெற்றி பெற்றால், சீனா வெற்றிபெறுவதாக அர்த்தம் என கூறிய அவர், கொரோனா வைரஸை நாம் விரைவில் அளிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தொலைக்காட்சி விவாதத்தின் போது மூச்சி திணறல் ஏற்பட்டது. அதனை அதிபர் டிரம்ப், ஜோ பைடனுக்கு ஒரு நாய் போல மூச்சுத் திணறல் ஏற்பட்டது என விமர்சித்தார்.