எச் -1 பி விசா வரம்பை அதிகரிக்கவும், க்ரீன் கார்டுகளுக்கான ஒதுக்கீட்டை நீக்க ஜோ பிடன் திட்டம்..?
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், எச் -1 பி உள்ளிட்ட விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நாடு வாரியாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கான வரம்பை அகற்றவும் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இவை இரண்டும் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய நிபுணர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் சில குடியேற்றக்கொள்கைகளை இயற்றி உள்ளனர். இதனால், அமெரிக்காவில் ஏராளமான இந்திய குடும்பங்களை மோசமாக பாதித்தனர்.
இந்நிலையில், வெளிச்செல்லும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை ஜோ பிடன் மாற்றியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பார், இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 11 மில்லியன் புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படலாம்.
ஜோ பைடன் தனது பிரச்சரத்தின்போது, தான் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை வழங்கப்படும். மேலும், வேலை அடிப்படையிலான விசாக்கள் வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வகை செய்யப்படும் என கூறினார்.