“பிரச்சாரம் மேற்கொள்ளும்போது ஜோ பைடன் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்!”- டிரம்ப்

ஜோ பைடன் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாகவும், டுத்த பிரச்சாரங்களுக்கு செல்வதற்குள் அவருக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.
மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.
இந்தநிலையில் அதிபர் டிரம்ப், ஜோ பைடன் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக விமர்சித்தார். மேலும், பைடன் பேசும்போது வித்தியாசமாக தெரிவதாகவும், அடுத்த பிரச்சாரங்களுக்கு செல்வதற்குள் அவருக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்த ஜோ பைடன், அதிபர் டிரம்ப் கூறுவது முட்டாள்தனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.