வெற்றிபெற்றால் இன வெறி வன்முறைகளை கட்டுப்படுத்துவேன் -ஜோ பைடன்
வெற்றிபெற்றால் இன வெறி வன்முறைகளை கட்டுப்படுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.டிரம்ப் மற்றும் பைடன் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்காவின் மிச்சிகன் ( Michigan ) மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் சார்பாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் பேசுகையில்,தேர்தலில் வெற்றிபெற்றால் ,நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன்.மேலும் இன வெறியர்களின் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.ஆகவே இன வெறி வன்முறைகளை கட்டுப்படுத்துவேன். மேலும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மேலாதிக்கத்தை உயர்த்த ஊக்குவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.