அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமைக்கோர முடியாது! ட்ரம்ப் ட்வீட்

அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமைக்கோர முடியாது.
அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
இதனையடுத்து, ட்ரம்ப் அவர்கள், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தவறான முறையில் உரிமை கோர முடியாது. அவ்வாறு உரிமை கோரும் பட்சத்தில், நானும் உரிமை கோர முடியும்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025