அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் டிரம்ப் என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவி வரும் சூழலிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜோ பைடன் காணொளி காட்சி மூலமாக பரப்புரை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், என்னைப் பொருத்தவரையில் அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் யார் என்றால் அது டிரம்பாக மட்டும்தான் இருக்க முடியும்.டிரம்பை போல அமெரிக்காவில் யாரும் மக்களை இனவெறியுடன் அணுகியது கிடையாது.மக்களின் தோலின் நிறம், அவர்களின் நாட்டின் தோற்றம், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு டிரம்ப் கையாளும் விதம் முற்றிலும் நோய்வாய்ப்பட்டது என்று பேசியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…