ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை .!

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அவர்களின் மருத்துவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜோ பைடன் மற்றும் டாக்டர் ஜில் பிடென் ஆகியோர் இன்று கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், அந்த சோதனை முடிவில் கொரோனா இல்லை என்று டாக்டர் கெவின் ஓ’ கானர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜோ பைடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், நானும் எனது மனைவியும் கொரோனா பரிசோதனை செய்தோம். சோதனை முடிவில், நெகடிவ் என வந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை கழுவுங்கள் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.