சந்திரமுகி 2 ல் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா ஜோதிகா.!

சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிகை ஜோதிகா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் நடிக்க வுள்ளார். மேலும் லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையனாக நடிக்கவுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க கோரி அவரை அணுகியதாக கூறப்படுகிறது. மேலும் ஜோதிகா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒன்று சந்திரமுகியாகவும், மற்றொன்று முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த செய்தி வதந்தியா இல்லையா என்று கூறி படக்குழுவினர் தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025