58 நாட்களில் ரூ .1,68,818 கோடியை தட்டி தூக்கிய ஜியோ ! கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளோம் – முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 58 நாட்களில் ரூ .1,68,818 கோடிக்கு மேல் திரட்டி கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த இருமாதமாக பல கோடி முதலீடுகளை பெற்று தனது பொன்னான காலத்தை அனுபவித்து வருகிறது.இது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி ,மார்ச் 2021 இறுதிக்குள்கடனில்லா நிறுவனமாக மாற்றும் இலக்கை அதற்கு முன்னதாகவே பெற்றுவிட்டோம் . பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன்” என்று அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 58 நாட்களில் பேஸ்புக் முதல் பல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து ரூ .1,68,818 கோடிக்கு மேல் திரட்டி கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளது.அதன் டிஜிட்டல் சர்வீசஸ் பிரிவில் 1,15,693.95 கோடி ரூபாய் முதலீடுகளையும், உரிமைகள் வழங்குவதன் மூலம் ரூ .53,124.20 கோடியையும் முதலீடாக பெற்றுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார் .