ஜியோ சேவை முடக்கம்..? டிவிட்டரில் டிரெண்டாகும் #JioDown ஹேஷ்டேக்..!

Default Image

ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலி சேவை முடங்கியது. இந்த முடக்கத்தால் அதிகமான வருமானத்தை பேஸ்புக் நிறுவனம் இழந்துந்துள்ளது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார்.

இந்த முடக்கத்தின் போது டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளத்தில் மீம்ஸ் அதிக அளவில் பரவப்பட்டு வந்த  நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி பலர் டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி ட்விட் செய்து வருகின்றனர். ஜியோவில் ஏற்பட்ட பிரச்சனை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்டதா..? அல்லது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளதா..? என்பது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியவில்லை.

ட்விட்டரில் இன்று காலை முதல் நெட்வொர்க்கில் பிரச்சனை ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்