கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் இருக்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் வரும் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட், திரையில் உள்ள எழுத்துக்களை வாசித்து கூறும் வசதி, ஏஆர் ஃபில்டர் உடன் கூடிய கேமரா வசதி, மொழிப்பெயர்ப்பு ஆகியவைகள் இருப்பதாக தெரிவிப்பட்டுள்ளது.
மேலும், 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வசதியை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் விலை பற்றிய தகவல்களும் இதன் கூடுதல் விவரங்கள் பற்றியும் வரும் வாரங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…