யாரைக் கேட்டு இந்த வீடியோவை வெளியிட்டீர்கள்? கொதித்து போய் இருக்கும் ஜெயா டிவி முதன்மை அதிகாரி விவேக் …

Default Image

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். ‘ விவேக்கிடம் சசிகலா ஒப்படைத்த வீடியோக்கள் எப்படிக் கசிந்தது எனக் குடும்ப உறவுகள் கொதிக்கின்றனர். இந்த வீடியோ காட்சிகளை ஜெயா டி.வியில் ஒளிபரப்பப்படவில்லை. வெளிமாநிலத்தில் இருக்கும் விவேக், வீடியோ வெளியானதைப் பார்த்து கொதித்துப் போய்க் கிடக்கிறார்’ என்கின்றனர் ஜெயா டி.வி நிர்வாகிகள்.

உடனே தினகரன் தரப்பைத் தொடர்பு கொண்டவர், ‘ யாரைக் கேட்டு இந்த வீடியோவை வெளியிட்டீர்கள்? மிக ரகசியமாக இந்த வீடியோக்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார் சின்னம்மா. அவருடைய அனுமதியில்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டீர்கள். ஒரு சாதாரண தேர்தல் வெற்றிக்காக, இப்படியொரு கோலத்தில் அம்மா இருக்கும் காட்சிகளை வெளியிடலாமா? இத்தனை மாதங்களாகப் பாதுகாத்து வைத்த ரகசியத்தை எப்படி வெளியிடலாம். வெற்றிவேல் மீது மட்டுமல்ல, தினகரன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறார் சின்னம்மா. இப்படி வெளியிட்டு நாம் நல்லபெயரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கதறி அழுதபடியே கொதிப்பைக் காட்டியிருக்கிறார். வீடியோ காட்சிகளைப் பார்த்து விவேக் கதறியழுததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபோது, இந்த வீடியோ காட்சிகளை தினகரனிடம் கொடுக்காமல் விவேக்கிடம் கொடுத்தார். அப்போது, ‘ இந்த வீடியோக்களைப் பத்திரமா பார்த்துக்கப்பா. எந்தச் சூழலிலும் இந்தக் காட்சிகள் வெளியாகக் கூடாது’ எனக் கண்டிப்பான குரலில் உத்தரவிட்டே சிறைக்குச் சென்றார்.

 

source:   dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்