200 பில்லியன் சொத்துக்கள் சேர்த்து உலகில் முதல் பணக்காரரான அமேசான் நிறுவனர்
உலகிலேயே 200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெயரையும், உலக பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்தார், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், பல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அமேசான் நிறுவனத்தின் பங்குகள், 2.5 சதவீதமாக அதிகரித்தது.
56 வயதாகும் ஜெப் பெஸோஸின் நிகர மதிப்பு, ஜனவரி 1- ம் தேதி 115 பில்லியன் டாலராக இருந்தது. தற்பொழுது அவரின் சொத்து மதிப்பு, தற்பொழுது 205 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அவரை தொடர்ந்து, உலகின் இரண்டாவது பணக்காரரான பட்டியலில் பில்கேட்ஸ் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 116.2 பில்லியன் டாலராக உள்ளது.