அமேசான் மற்றும் புளூ ஆரிஜின் நிறுவனரும்,உலகப் பணக்காரருமான ஜெப் பெசோஸ் நாளை விண்வெளிக்கு செல்கிறார்.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாளை (ஜூலை 20 ஆம் தேதி) விண்வெளிக்கு செல்ல உள்ளார்.மேற்கு டெக்ஸாசில் உள்ள ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறார்.
முதல் பெண் விமான பயிற்சியாளர்:
அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளரான 82 வயது வேலி பங்க் என்ற மூதாட்டி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த 18 வயது ஆலிவர் டேமன் ஆகியோரும் பயணிக்கின்றனர்.வேலி பங்க் 1960-களிலேயே நாசாவின் கடினமான விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியில் வென்றவர்.ஆனால் பெண்கள் பறக்கக் கூடாது என்ற அமெரிக்க ராணுவ விதிகள் காரணமாக அவர் கனவு நிறைவேறாமல் இருந்தது.அந்த கனவு தற்போது ஜெப் பெசோஸ் மூலம் நிஜமாக்கப்படவுள்ளது.
விண்வெளி பயணம்:
புதிய ஷெப்பர்ட் விண்கலம் மூலம் 100 கி.மீ., உயரத்தில் உள்ள புவியின் வளிமண்டல எல்லைக்கோடான கார்மன் கோட்டை தாண்டி 6 கிலோ மீட்டர்கள் இவர்கள் பயணித்து,அங்கிருந்து பூமி பந்தையும், அடர் கருப்பான விண்வெளியையும் சில நிமிடங்கள் ரசித்துவிட்டு பூமிக்கு திரும்புவர் என தகவல் வெளியானது.
விண்வெளிக்கு பயணிக்கும் முதல் இளம் நபர்:
இந்நிலையில்,ஜெஃப் பெசோஸ் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாலோவர்ஸ்க்கு மத்தியில் 18 வயதான ஆலிவர் டேமனை அறிமுகப்படுத்தி ஒரு குறுகிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
“இப்பயணத்திற்கான ஏலத்தில் 200 கோடி ரூபாய் செலுத்தி வென்ற நபர் குறிப்பிட்ட தேதியில் வர முடியாத காரணத்தால்,அடுத்த இடத்திலிருந்த டேமனுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஜூன் ஏலத்தின் போது இருக்கைக்கு ஏலம் எடுத்த டேமென்,ப்ளூ ஆரிஜினின் முதல் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர் ஆவார்.
விண்வெளிக்குச் செல்வது பலருக்கு இறுதிக் கனவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.ஆனால் ,தற்போது விண்வெளிக்கு பயணிக்கும் முதல் இளம் நபராக டேமன் உள்ளார்.இந்த குழுவுடன் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”,என்று கூறினார்.
முக்கிய பொறுப்பு:
இதனைத் தொடர்ந்து,விண்வெளி பயணம் குறித்து டேமன் கூறுகையில்: “எப்போதும் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர் மற்றும் சிறந்த தொலைநோக்கு பார்வையாளராக பெசோஸ் உள்ளார்.
மேலும்,நான் ஒரு முக்கிய பொறுப்பை உணர்கிறேன், ஏனென்றால் நான் விண்வெளிக்கு செல்லும் இளம் நபராக உள்ளேன்.அதிகமான மக்கள் விண்வெளிக்கு பயணம் செய்ய ஆர்வம் காட்டும் மற்றும் வாய்ப்பு கிடைக்காத நிலையில்,இது போன்ற ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.விண்வெளிக்கு சென்று திரும்பும்போது,பேச்சற்றவனாக நான் மிகவும் ஆச்சரியத்தில் இருப்பேன்.” என்று கூறினார்.
டேமன்,மில்லியனர் ஜோஸ் டேமனின் மகன் ஆவார்.மேலும்,இவர் ஒரு தனியார் பைலட் உரிமம் பெற்றவர் மற்றும் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் புதுமையான மேலாண்மை படிக்கும் கல்லூரி மாணவர் ஆவார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…