ஜெயம்ரவியின் பூமி படத்திலுள்ள தமிழன் என்று சொல்லடா என்ற பாடலை அனிருத் அவர்கள் பாடியுள்ளார்.
நடிகர் ஜெயம்ரவி கடைசியாக கோமாளி என்ற படத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்தார். தற்போது இவர் பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பூமி திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க லட்சுமணன் இயக்கியுள்ளார் .இவர் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஊரடங்கிற்கு முன்பு படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. மே மாதத்தில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செக்கன்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்ட்ர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‘தமிழன் என்று சொல்லடா’ என்ற பாடல் செப்டம்பர் 10ம் தேதி வெளியிடவுள்ளதாக டி. இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் . மேலும் அதன் புரோமோ வீடியோவையும் டி. இமான் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாடும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அனிருத் குரலில் பட்டையகிளப்பும் வரிகளுடன் வெளியாகவிருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…