அட்லி தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லி. அதனை தொடர்ந்து மெர்சல், தெறி போன்ற விஜய்யை வைத்து எடுத்து வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் இவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கும் இயக்குனர் என்று இன்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இவர் பல படங்களை தனது தயாரிப்பு நிறுவனமான Aforapple என்பதன் மூலம் தயாரித்துள்ளது. அவ்வாறு அட்லி தயாரிப்பில் உருவாகும் அந்தகாரம் படத்தினை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த படத்தை விக்னராஜன் இயக்க பிரதீப் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் கைதி பட வில்லனான அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அட்லி அடுத்த படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் இவரது உதவியாளர் இயக்கும் படத்தினை அட்லி தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் ஜெயம் ரவி அவர்கள் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…