ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு நானே ஆகச்சிறந்த பொருத்தம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

Default Image

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க பலரும் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இதில் முதலில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து தலைவி திரைப்படத்தினை வேக வேகமாக தயாராக்கி வருகிறார்.  இந்த படம் அடுத்த  வருடம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

இதனை தொடர்ந்து தி அயர்ன் லேடி எனும் தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப் படத்தை அறிமுக இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தார். அந்த படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க உள்ளார்.
அண்மையில் அப்படம் பற்றி நித்யா மேனன் கூறுகையில், ‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நானே பொருத்தமாக இருப்பேன். எனவும், எங்களுக்குள் சில ஒற்றுமைகள் உண்டு. எனவும், குறிப்பிட்டுள்ளார். அதாவது இரண்டு பேருமே பெங்களூருவை சேர்ந்தவர்கள். மேலும், இவர் இருவரும் ஒரே மாதிரியான குணாதிசியங்களை கொண்டவர்கள் எனவும், இயக்குனர் பிரியதர்ஷனி, ஜெயலலிதாவின் பேச்சு அவருடைய மேனரிசம் நடை உடை பாவனைகள் இதனைப் பற்றி நிறைய கூறியுள்ளார். எனவும் கூறி, அப்படம் பற்றி விவரித்துள்ளார். விரைவில் இப்படம் சூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்