கெளதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதாவாக களமிறங்கும் ரம்யா கிருஷ்ணன்!

Default Image

ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை கோலிவுட்டில் சில இயக்குனர்கள் படமாக்கி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி என லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. தற்போது அந்த லிஸ்டில் புதியதாக இணைந்துள்ளவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

இவர் ஜெயலலிதாவின் அரசியல் கால பயணங்களை வெப் சீரிஸாக படமாக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். இந்த சீரிஸ் எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பாக உள்ளது. என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு குயின் என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இளமைக்கால காட்சிகளை மட்டும் கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன்இயக்க உள்ளார். இந்த இளமைக்கால ஜெயலலிதாவாக விசுவாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து இருந்த அனிகா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்