யார் வேண்டுமானாலும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரலாம் !
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திரைத்துறையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவைத் தான் ஆட்சியில் அமர வைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நான்காவது பட்டமளிப்பு விழா காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திரைத்துரையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவையே மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.