ஜெய் பீம் : புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் பாராட்டு …!
ஜெய் பீம் படத்திற்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.
இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், சமூகத்தில் அப்பாவி மக்கள் எப்படி பலிகடாவாக மாற்றப் படுகிறார்கள் என்பதை குறித்தும் சிந்திக்க வைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கே.சந்துரு என்பவரது நிஜவாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.
• BREAKING |
அண்ணன் @Suriya_offl நடித்து வெளிவந்த #JaiBhim திரைப்படத்திற்கு தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் பாராட்டடு????????#JaiBhimOnPrime pic.twitter.com/vwCTZtlkjI
— Hari (@Hari_Socialist) November 9, 2021