ஐஎம்டிபி தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் …!

Default Image

ஐஎம்டிபி தரவரிசையில் பிடித்த ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் ஞானவேல் தாஸ் அவர்களது இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படமாகிய ஜெய் பீம் பழங்குடியின மக்கள் காவல்துறையினரால்  அனுபவித்த கொடுமைகள் குறித்த கருத்துக்களை கொண்டிருக்கும். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பலராலும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், சினிமா தகவல்களை கொண்ட புகழ் பெற்ற தளமாகிய ஐஎம்டிபியிலும் ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான பல்வேறு திரைப்படங்களின் ரேட்டிங் இடம்பெறும் இந்த ஐஎம்டிபி இணையதளத்தில் உலக அளவில் அதிக புள்ளிகளைப் பெற்ற முதல் 250 பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஜெய் பீம் படம் தான் இந்திய அளவில் ஐஎம்டிபி வலைதளத்தின் முதல் இடத்தை பெற்றுள்ளது. முதல் டாப் 10 திரைப்படங்களில் ஜெய் பீம் திரைப்படம் ஐஎம்டிபி தளத்தில் முதல் திரைப்படமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்