நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படமானது, கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, இயக்குநர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், 94-வது ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, இப்படம், இயக்குநர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் தளத்தில் பதிவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, 94-வது ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் உலகளவில் 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர்’ ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…