ஜெய் பீம் : ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த வீடு கட்டி கொடுக்கும் லாரன்ஸ்!

Default Image

ஜெய் பீம் கதையின் உண்மை கதாபாத்திரமான ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரதீஷா விஜயன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் வெளியாகிய  படம் தான் ஜெய்பீம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதன்படி இந்த படத்தில் சுட்டி காண்பிக்கப்பட்டுள்ள ராசாக்கண்ணு என்பவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்தார். இந்த வழக்குக்கு 13 ஆண்டுகளுக்கு பின்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவரது மனைவி பார்வதி அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, தான் மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். எனவே, ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன்.

பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள் என கூறியுள்ளார்.

28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசு பொருளாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்