தசைநார் கிழிந்ததால் போட்டியில் இருந்து விலகிய ஜேசன் ராய்!
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ,அபிகானிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் விளையாடமாட்டார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் ஜேசன் ராய்க்கு தசை நார் கிழித்து உள்ளதால் குறைந்தது ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்பதால் இன்று , அடுத்து நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இவர் விளையாடிய மூன்று போட்டியில் 54, 8 ,153 ரன்கள் அடித்து இருந்தார்.மேலும் கேப்டன் மோர்கனும் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ஜேசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ இடம்பெற்றுவுள்ளார். கேப்டன் மோர்கன் இடம் பெறவில்லை என்றால் மொயீன் அலி இடம் பெறுவார். கேப்டன் மோர்கன் இடம் பெறவில்லை என்றால் கேப்டனாக பட்லர் பதவி வகிப்பார்.