பங்களாதேஷ் பந்துகளை பறக்க விட்ட ஜேசன் ராய்!387 ரன்கள் இலக்காக வைத்த இங்கிலாந்து

இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜோனி பைர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.முதல் மூன்று ஓவர்களில் பொறுமையாக விளையாடிய இருவரும் பின்னர் தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
இருவரின் அதிரடி கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சதத்தை எட்டியது.அந்த சமயத்தில் 20 ஓவரில் ஜோனி பைர்ஸ்டோவ் 51 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் ஜோ ரூட் களமிறங்க ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தை நிறுத்தாமல் தனது சதத்தை நிறைவு செய்தார்.
இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.ஜோ ரூட் 21 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் ஜோஸ் பட்லெர் களமிறங்கிய சிறுது நேரத்தில் ஜேசன் ராய் 153 ரன்னுடன் வெளியேறினர்.
இங்கிலாந்து அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முகம்மது சைஃபுடின்,மெஹீடி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 387 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025