ஒரே சதத்தின் மூலம் பல சாதனை படைத்த ஜேசன் ராய்
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் 280 ரன்கள் எடுத்தனர்.இதனால் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஜேசன் ராய் 153 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். மேலும் நேற்றைய போட்டி மூலம் இன்னும் பல சாதனை படைத்தது உள்ளார்.
- அதில் உலகோப்பையில் அடித்த முதல் சதம் ஆகும்.
- பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த முதல் சதம் ஆகும்.
- இங்கிலாந்தில் அடித்த 6-வது சதம் ஆகும்.
- ஒருநாள் தொடரில் அடித்த 9-வது சதம்
- 2019-ல் அடித்த 3-வது சதம்