லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறி நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையானது திருப்திகரமாக இருந்தது.எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.மேலும் இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள் கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட நிகழ்வானது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…