ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு.. வெளியான திக் திக் காட்சிகள்!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, மர்ம நபர் ஒருவரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியதாக தகவல் வெளியாகியது.
கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் சுயநினைவை ஷின்சோ அபே இழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஷின்சோ அபேவை கொல்ல முயன்ற 41 வயது மதிக்கத்தக்க நபரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இணையத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட திக் திக் வீடியோ வெளியாகி உள்ளது. அதனை ஜப்பானிய ஊடகங்கள் மூலம் வெளியிட்டு உள்ளது. அதில் அந்த குற்றவாளி ஷின்சோ அபே அருகில் இருக்கிறான். திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஒருகின்றனர்.
Shocking #BreakingNews
Don’t need any proof. He is attacker: JapanAccording to early reports, the assailant suspected of shooting #ShinzoAbe is Tetsuya Yamagami (山上徹也), aged 42. In Nara pic.twitter.com/99RuoAw6Ld
— Shivani Dutta (@ShivaniO5) July 8, 2022