பலி எண்ணிக்கை 26ஆக உயர்ந்தது! மேலும் 18 பேரை கணவில்லை! ஜப்பானை மிரட்டும் புயல் மழை!
ஜப்பான் நாட்டில் தற்போது புயலின் தாக்கம் அதிகமாகி அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோர புயலுக்கு ஹகிபீஸ் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் 60 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த புயலினால் ஏற்பட்ட கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதனால், பொதுமக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன, இந்த வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 26 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.