ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல் : 10 வது முறையாக வெற்றி பெற்ற ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி!
ஜப்பானில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கடந்த மாதத் தொடக்கத்தில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புமியோ கிஷிடா அவர்கள் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து தனது தலைமையிலான அரசு புதிய பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக வாக்காளர்களின் ஆணையை பெற விரும்புவதாக கூறி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடித்து, முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்த தேர்தல் 465 இடங்களில் நடைபெற்றுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி கட்சிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளது. இந்த கட்சியின் கூட்டணி கட்சிகள் 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக புமியோ கிஷிடா அவர்கள் தலைமையிலான ஆளும் கட்சி பத்தாவது முறையாக ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.