ரூ.177 கோடியா…! அப்படி என்ன இருக்கு இந்த ஓவியத்தில்..
சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியங்களை ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் நிஃப் பிகைண்ட் பேக் (Knife Behind Back) என்ற பெயரில் வரையப்பட்ட சிறுமியின் கார்ட்டூன் ஓவியமும் இடம்பெற்றது. அந்த ஒவயத்தில் முட்ட கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும் மற்றொரு கை முதுகுபின் மறைத்து வைத்திருப்பது போல் இருக்கிறது.
”அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்?” என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது. இந்த ஒவியத்திறகாக 6 பேர் போட்டி போட்டு ஏலம் தொடங்கிய 10 நிமிடத்திலே ஓவியத்தின் மதிப்பு 25 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் ரூ.177 கோடி ஆகும். இறுதியில் ஏலம் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமாக ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.