அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் குலுங்கும் ஜப்பான்.. சுனாமி அலைகளால் அதிர்ச்சி! பதபதவைக்கும் வீடியோ காட்சிகள்…

japan tsunami

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் இன்று பிற்பகல் (இந்திய நேரப்படி) 12 மணிக்கு மேல் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 3 மணிநேரத்தில் ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் சுமார் 30 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியானது. இதில், 5.5 ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

2024ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கங்களை தொடர்ந்து இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

3 மணி நேரத்தில் 30 நிலநடுக்கங்கள்…. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை!

சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. தேசிய அளவிலான மீட்பு படையினர் மற்றும் காவலர்கள், ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் களமிறக்கப்பட்டு, மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்து வெளியேறினர். அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கி வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ காட்சிகளை பார்க்கும் போது உயிர் சேதமும், பொருட் சேதமும் அதிக அளவு ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.

Scary visuals. The first wave of #Tsunami hits #Japan.

Japan is on alert after a 7.6-magnitude earthquake.pic.twitter.com/38scuurWkm

— George ???????? (@georgeviews) January 1, 2024

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்