மூன்றாம் காலாண்டில் மந்தநிலையிலிருந்து வெளியேறிய ஜப்பான்..!
ஜப்பானில் கொரோனா வைரஸ் மற்றும் வரி உயர்வு ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றிய பின்னர், உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதிகள் காரணமாக காலாண்டு காலாண்டு வளர்ச்சியை அதிகரிக்க உதவியது. ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், ஜப்பானில் பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியபோது ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அவசரகால நிலை விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளை போல ஜப்பானில் கட்டுப்பாடுகள், வணிகங்களை அடைப்பதோ அல்லது மக்களை வீட்டிலேயே வைத்திருப்பதது போன்ற எதையும் அவர்கள் பின்பற்றவில்லை.
ஜூன் மாதத்தில் அவசரநிலை நீக்கப்பட்டது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு குறைவாகவே கொரோனாவால் பத்திக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக 118,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,885 பேர் உயிழந்துள்ளனர்.