ஜப்பானில் மே 31ம் வரை ஊரடங்கு நீட்டிப்பு !
ஜப்பானில் மே 31ம் வரை ஊரடங்கு நீட்டிப்பதாக ஜப்பான் பிரதமர் உத்தரவு.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் 15,477 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4918 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 577 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜப்பானில் கொரோனா தடுப்பு முயற்சியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பானில் மே 6ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்து பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொரோனாவில் இருந்து விலகி ஜப்பான் மே 7 ஆம் தேதி இயல்பு நிலைக்கு வருவது கடினம் என்பதால் ஊரடங்கை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக கூறியுள்ளார்.