அதிர்ச்சி தகவல் : ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை.. கொலையாளி ‘ஹீரோ’ … கொண்டாடிய மக்கள்…
ஷின்சோ அபே ஜப்பான் நாட்டு ஆட்சியில் இருந்த போது, அவருடைய நிலைப்பாடு சீனாவுக்கு எதிராகவே இருந்ததாம். அதன் காரணமாக தான் சீனாவில் சில பகுதி மக்கள் கொண்டாடியுள்ளனர்.
ஜாப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தனது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும்போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டார்.
தேர்தல் நேரத்தில், முன்னாள் பிரதமர், அதுவும் பாதுகாப்பு கடுமையாக கொண்ட ஜப்பான் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்வேறு நாட்டு தலைவர்களும் ஷின்சோ அபே இறந்ததற்கு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்க ஒரு நாட்டில் சில பகுதி மக்கள் மட்டும் ஷின்சோ அபே இறந்ததை கொண்டாடி உள்ளனர்.
அதுவும், ஷின்சோ அபேவை சுட்டு கொன்ற கொலையாளியை ஹீரோ என வர்ணித்து வருகின்றனர். அது யார் என்றால், சீன நாட்டு மக்கள் தான். அந்நாட்டு சீனா சமூக வலைதளங்கள் சிலவற்றில் தான் அந்நாட்டு மக்கள் இப்படி கொண்டடி வருகின்றனர்.
ஏனென்றால் ஷின்சோ அபே ஆட்சியில் இருந்த போது, அவருடைய நிலைப்பாடு சீனாவுக்கு எதிராகவே இருந்தது. அதன் காரணமாக தான் சீனாவில் குறிப்பிட்ட மக்கள் இப்படி கொண்டாடி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.