ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு!

Japan earthquake

ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று முன் தினம் (புத்தாண்டு தினத்தன்று) ஒரே நாளில் மட்டும் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்நாட்டை உலுக்கியுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் மத்திய ஜப்பானை கடுமையாக தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வீடுகள், கட்டடங்கள் குலுங்கி தரைமட்டமாகும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. தற்பொழுது, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, ஜப்பானின் மேற்கு பகுதியில் அதிகபட்சமாக 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடலோர பகுதி நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடலோர பகுதிகளில் சுனாமி அலைகளும் தாக்கியது.

இந்த சூழலில் ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாஜிமாவில் 29 பேர், சுசூவில் 22 பேர், நானோவில் 5 பேர், அனாமிசு, ஹகுய் மற்றும் ஷிகாவில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானிய மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஜப்பானில் பயணிகள் விமானம் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு.!

அடுத்தடுத்த நிலநடுக்கத்தால், தங்களை வீடுகளை விட்டு பலர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்