FIFA WORLD CUP 2018:கொலம்பியா அணிக்கு எதிரான போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!
பலம் வாய்ந்த கொலம்பியா அணியை குரூப் H பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி விளையாடியது.
மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டம் மொர்டோவியா மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் ஆட்டத்தின் பாதியில் இரு கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் தலா ஒரு கோல் அடித்தது.பின்னர் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ஜப்பான் அணி இரண்டாவது கோல் அடித்தது.பின்னர் கொலம்பியா அணி ஒரு கோல் கூட அடிக்காததால் ஜப்பான் 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.அதுமட்டும் அல்லாமல் ஆசியா அணிகளிலே ஜப்பான் அணிதான் உலக கோப்பை வரலாற்றிலே முதல் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குரூப் H பிரிவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் போலந்து அணி செனகல் அணியை எதிர்கொள்கிறது. போலந்து அணியை ஒப்பிடும் போது செனகல் அணி சற்று வலிமை குறைந்தது எனினும், ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. ரஷ்யாவில் உள்ள ஸ்பார்டக் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.