இன்றைய (22.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : சுபக்காரியத்திற்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் சமயத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.முக்கியப் புள்ளியின் சந்திப்பு தொழில் முன்னேற்றம் ஏற்படும்.கல்யாண முயற்சிகள் கைகூடும்.
ரிஷபம் : எண்ணியது நிறைவேற நந்தீஸ்வரர் வழிபடை மேற்கொள்ள வேண்டிய நாள். உங்களது கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நன்மைத் தரும்.உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வருவதில் சற்று தாமதப்படும். வீண்விரயம் உண்டு.
மிதுனம் : சான்றோர்களின் சந்திப்பு சந்தோஷத்தை தரும்.பணவரவு திருப்தி தரும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வர். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் வேண்டிய சிந்தணை மேலோங்கும்.
கடகம் : காரியங்களை கடவுள் வழிபாடும் மூலமாக வெற்றி ஏற்படுகின்ற நாள். பொதுநலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் புகழ்கூடும். உத்தியோக ரீதியாக எடுத்த முயற்சிக்கு அனுகூலம் கிடைக்கும்.பாதியிலேயே நின்ற பணியை தொடருவீர்கள். பொருளாதராத்தில் நிதி நிலை உயரும்.
சிம்மம் : இன்று உங்களின் மதிப்பு மற்றும் மரியாதை உயருகின்ற நாள். மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நிகழ வழி பிறக்கும். எடுத்த காரியத்தை முடித்து வெற்றி அதில் காண்பீர்கள். அரசியல் செல்வாக்கு உயரும். வாகன யோகம் உண்டு.
கன்னி : சிவ வழிபாட்டால் சிறப்புகளை எல்லாம் பெறும் நாள். எண்ணிய காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும்.ஆரோக்கியம் சீராக ஒரு தொகை செலவிடுவீர்கள். பயணத்திற்கு பலன் கிடைக்கும்.
துலாம் : இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழுகின்ற நல்ல நாள். வீடுகட்டும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் கேட்டு நடப்பதனால் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் எல்லாம் உங்களை விட்டு அகலுவர்.
விருச்சிகம் : இன்று உங்களைத் தேடி நல்ல வாய்ப்புகள் எல்லாம் தேடி வரும் நல்ல நாள். நட்பு வட்டாரங்கள் சமயத்தில் கைகொடுத்து உதவுவர். பணவரவு திருப்தி தரும். தங்களின் தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். ஆலய வழிபாடுகளில் ஆர்வம் கூடும்.
தனுசு : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள் தொழில் சம்பந்தமாக புதிய முதலீடுகள் செய்ய முன்வர ஆர்வம் ஏற்படும். வரன்கள் வாயிற்க்கதவை தட்டும். பிரதிபலன் பார்க்காமல் செய்த உதவிக்கு எல்லாம் நன்றி கிடைக்கும்.
மகரம் : இன்று விரயங்களை எல்லாம் சமாளிக்க வேண்டிய நாள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்குவதில் இருந்து வந்த குழப்பங்கள் மற்றும் தடுமாற்றங்கள் எல்லாம் அகலும். நீண்ட நாள் நடைபெறாமல் இருந்து வந்த காரியங்கள் இன்று மிக வேகமாக முடித்து மகிழ்வீரக்ள்.
கும்பம் : வெற்றிமேல் வெற்றிகள் வந்து சேருகின்ற நல்ல நாள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நன்மைப் பயக்கும். அயல்நாட்டில் இருந்து அனுகூலத் தகவல் உண்டு.
மீனம் : ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கின்ற நாள். அதிகாரப் பதவியில் உள்ள முக்கியப் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் விருத்தி ஏற்படும். திருமண வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.