கிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு கேலிக்குரியது ஜேம்ஸ் ஆண்டர்சன் பாய்ச்சல்!
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தமது நகத்தால் பந்தை சேதப்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த குற்றச்சாட்டு தாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான் என கூறினார். போட்டியின் நடுவரே தம்மீது தவறு இல்லை என்று கூறிய நிலையில், இதுபோன்ற விமர்சனங்கள் பொருத்தமற்றது என்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com