ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம்பெறாமல் வெளியேறிய ‘ஜல்லிக்கட்டு’.!

ஆஸ்கர் போட்டிக்கு இந்திய சார்பில் போட்டியிட்ட ஜல்லிக்கட்டு திரைப்படம் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற மலையாள திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில்
ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
பல விருதுகளை வென்ற இந்த திரைப்படம்
இந்தியாவின் சார்பாகப் சிறந்த அயல்நாட்டு திரைப்பட பிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது.இந்த பிரிவிற்காக மொத்தம் 93 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில் ஆஸ்கர் போட்டிக்கான இறுதிப் பட்டியலை அகாடமி புதன்கிழமை அன்று வெளியிட்டது.அதில் மலையாள திரைப்படமான ‘ ஜல்லிக்கட்டு’ இடம் பெறவில்லை .இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை ஆஸ்கர் விருதை இந்தியாவைச் சேர்ந்த எந்தத் திரைப்படமும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025