ஜாலியா பேசிக்கிட்டு இருந்த காதலர்கள்.! திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன்.! பீச்சில் நடந்த கொடூரம்.!

Default Image
  • இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்கள். 
  • இருவரும் பேசி கொண்டிருக்கும் போது, மருத்துவ மாணவியின் காதலன் திடீரென அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியவரை புலனாய்வு அதிகாரி மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமானது. அந்த வகையில் நேற்று இருவரும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கடற்கரையில் சந்தித்துள்ளார்கள். இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது, மருத்துவ மாணவியின் காதலன் திடீரென அவரின் கழுத்தை அறுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அலறி துடித்துள்ளார். அப்போது வலியை தாங்க முடியாமல் தனது கையில் இருந்த குடையை தூக்கி எறிந்துள்ளார்.

அதனிடையே, அந்த நேரத்தில் மாணவியின் காதலரான ராணுவ வீரர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். இந்நிலையில் அங்கு பணியில் இருந்த விமான புலனாய்வு அதிகாரி ஒருவர், ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை உணர்ந்து, தப்பியோடிய ராணுவ வீரரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கிடையே மாணவியின் சடலம் கடற்கரையில் மூழ்கியிருந்த நிலையில், அது காவல்துறையினரால் மீட்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ராணுவ வீரர் காதலியை எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu