கூகுளால் மீண்டும் மகுடம் சூட்டியது ஜெய்பீம்!!!

இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் முதலிடம்.
இயக்குனர் த.செ.ஞானவேல் தாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி(IMDP) தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ படத்தை பின்னுக்கு தள்ளி சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது. ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. 6வது இடத்தில நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு சூரரைப்போற்று திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025