சளி முதல் ஆண்மை குறைபாடு வரை தீர்வு கொடுக்கும் கருப்பட்டி வெல்லம்..!
கருப்பட்டி வெல்லம் என்றால் அது கரும்பில் இருந்து எடுக்கப்படுகிறது என அனைவருக்கும் தெரியும். இந்த கருப்பட்டி வெள்ளத்தின் சுவை , மணம், மருத்துவ குணம் அதிகம் இருப்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றன கருப்பட்டி வெள்ளத்தில் கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது.
இனிப்பு உணவு வகைகளில் நம்மில் பெரும்பாலானோர் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டிப் வெள்ளத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் கருப்பட்டி வெல்லம் எந்த நோய்க்கு பயன்படுகிறது என நாம் பார்க்கலாம்.
- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டி வெல்லத்தையும் , உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலுப்பெறுவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
- பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க கருப்பட்டி வெல்லம் பயன்படுகிறது.
- குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டி வெல்லத்தை வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், சளி நீங்கும்.
- ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. நம் தினமும் குடிக்கும் காபியில் தினமும் கருப்பட்டி வெல்லத்தைப் போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
- சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன், கருப்பட்டி வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.