தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் இன்னும் 5 நாட்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.
இந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த செய்திகள் பரவ தொடங்கியது. முதலில் தயாரிப்பு நிறுவனம் பிப்ரவரி 12-ம் தேதி ஜகமே தந்திரம் படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தனுஷ் மற்றும் இயக்குனர் ஒப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதன் பின் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் ஓடிடியில் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் ,இதனால் தனுஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமிடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்கான தெளிவான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் இன்னும் 5 நாட்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…