ஜகமே தந்திரம் திரையரங்கில் தான் ரிலீஸ்.!
நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு Y NOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாகவிருந்தது ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்கில் தான் வெளியாகும் என்று ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
#Jagamethendiram
Jagam is still healing & not back to normal ???? Untill then, be patient for the theatres to open & don’t believe in rumours ????The entire team is waiting to see @dhanushkraja go #rakitarakita on a big screen soon
Just #chillbro ????@StudiosYNot@karthiksubbaraj
— Sash (@sash041075) August 26, 2020