சுரங்க தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்! தொழிலாளியின் கையில் சிக்கிய ரத்தின கற்கள்!
சுரங்க தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்.
ஆப்பிரிக்க தேசத்தின் ஒரு சிறிய வடக்கு பகுதியில் மட்டுமே தான்சானைட் ரத்தினக் கல் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான்சானைட் சுரங்கங்களில் ஒன்றில் பணிபுரியும் சானினியு லைசர், ஒரு வாழ்வாதார சுரங்கத் தொழிலாளி ஆவார். இவர் இரண்டு பெரிய டான்சானைட் ரத்தினக் கற்களைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனை கண்டுபிடித்ததாக, அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு ரத்தினக் கற்களுக்காக 25 கோடி ரூபாய் காசோலையை வழங்கியுள்ளது. இந்த இரண்டு இரத்தின கற்களும் கருநீலம் நிறத்தில் காணப்படும். முதல் ரத்தினத்தின் எடை 9.27 கிலோ, இரண்டாவது எடை 5.103 கிலோ என்று சுரங்க அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.